தலிபான்களின் தாக்குதலில் 28 ஆப்கான் பொலிஸார் பலி

தெற்கு ஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடிகள் மீது தலிபான்கள் கடந்த புதன்கிழமை இரவு நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் 28 ஆப்கான் பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்.

28 உள்ளூர் மற்றும் தேசிய பொலிஸாரை சரணடைந்தால் வீடுகளுக்குச் செல்ல அனுமதிப்பதாக தலிபான்கள் அவர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர். பின்னர் அந்த பொலிஸாரிடம் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொண்டதை அடுத்து அவர்களை கொன்றுள்ளனர் என்று உருஸ்கான் ஆளுநரின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கும் தலிபான்கள் அந்தப் பொலிஸார் சரணடைவதை மறுத்ததை அடுத்தே கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். தலிபான் தலைவர்கள் மற்றும் ஆப்கான் அரச பிரதிநிதிகள் கட்டாரில் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. போரை முடிவுக்குக் கொண்டுவந்து போருக்கு பின்னரான சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கே இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

Fri, 09/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை