ஜப்பானை சூறையாடிய சூறாவளி தென் கொரியா பக்கமாக நகர்வு

தெற்கு ஜப்பானில் சோதத்தை ஏற்படுத்திய ஹய்சேன் சூறாவளி நேற்று தென் கொரியாவை அடைந்தது.

தென் கொரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரான பூசானின் தெற்காக உல்சான் பகுதியில் இந்த சூறாவளி கரையைத் தொட்டது. இதனால் 10 விமானநிலையங்களில் 300க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டு, சில புகையிரதப் பயணங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்த சூறாவளியால் ஜப்பானில் ஆயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு அஞ்சப்பட்டதை விட குறைவான சேதங்களே ஏற்பட்டிருப்பதாக ஆரம்ப மதிப்பீடுகளில் தெரியவந்துள்ளது.

கடும் காற்றினால் இடம்பெயர்வு மையத்தில் இருக்கும் கண்ணாடி உடைந்ததில் ஏற்பட்ட வெட்டுக் காயங்களால் நால்வர் பாதிக்கப்பட்டிருப்பதோடு மொத்தம் 32 பேர் காயமடைந்திருப்பதாக ஜப்பான் ஒளிபரப்புச் சேவையான என்.எச்.கே குறிப்பிட்டுள்ளது.

இந்த சூறாவளியின் பாதையில் உள்ள சுமார் எட்டு மில்லியன் மக்களை வெளியேற ஜப்பான் உத்தரவிட்டிருந்தது. இந்த பிராந்தியத்தில் கடந்த பல ஆண்டுகளில் தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளிகளில் ஒன்றான மெய்சாக் தாக்கி ஒரு சில தினங்களிலேயே இந்த சூறாவளி ஏற்பட்டுள்ளது.

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை