தலிபான்–ஆப்கான் அமைதி பேச்சுவார்த்தையில் தாமதம்

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் தலிபான்களுடனான பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளில் உருவாகியுள்ள சிக்கல்கள் காரணமாக ஆப்கான் அரச பேச்சுவார்த்தையாளர்கள் கட்டார் செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கைதிகள் விடுதலையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கடந்த பல மாதங்களாக தலிபான்கள் மற்றும் ஆப்கான் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டது. எனினும் தலிபான் கைதிகளை விடுவிக்க ஆப்கான் அரசு எடுத்த முடிவை அடுத்து இரு தரப்புக்கும் இடையிலான சந்திப்புக்கான வாய்ப்பு நெருங்கியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகள் தோஹாவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையாளர்கள் கடந்த வார இறுதியில் அங்கு பயணிக்கவிருந்தனர்.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்றும் தமது பயணத்தை மேற்கொள்ளவில்லை என்று அரசு மற்றும் இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கட்டாரை நோக்கி புறப்பட்டுச் செல்ல வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் கொடிகளை வைக்கும் வரிசை, உரை நிகழ்த்துவதற்கு வழங்கும் நேரம் உட்பட ஆரம்ப நிகழ்வின் இறுதி ஏற்பாடுகள் குறித்து சிக்கல் இருப்பதாலேயே பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Tue, 09/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை