கொவிட்-19: பிரேசிலில் தோற்றாளர் எண்ணிக்கை 4 மில்லியனாக உயர்வு

பிரேசிலில் கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 மில்லியனைத் தாண்டியுள்ளது. இருப்பினும் தற்போது புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் குறைய ஆரம்பித்திருப்பதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரேசிலில் முதல் முதலாக பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி கொவிட்-19 நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது. அதன் பின்னர் அங்கு நோய் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. 4.04 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்; 124,600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் இந்த மாதம் சராசரியாக அன்றாடம் சுமார் 44,000 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானதோடு, 870 பேர் வரை உயிரிழக்கின்றனர்.

நோய்த்தொற்றின் உச்சத்தைத் தாண்டிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இருப்பினும் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நோய்த்தொற்றால் பிரேசிலின் பொருளாதாரத்திற்கு பெரிய அடி விழுந்தது. கிட்டத்தட்ட 9 மில்லியனுக்கும் அதிகமானோர் வேலை இழந்தனர்.

Sat, 09/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை