சைபீரியாவில் தோன்றிய 165 அடி ஆழமான துளை

வடக்கு சைபீரியாவில் 165 அடி ஆழம் கொண்ட இராட்சத துளை ஒன்று ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சி நிறுவன ஊழியர்கள் கடந்த ஜூலையில் வேறு செய்தி ஒன்றை சேகரித்து விட்டு யமல் தீபகற்பத்திற்கு மேலால் பறந்தபோதே இந்த வினோதமான துளையை அவதானித்துள்ளனர்.

இந்த பள்ளத்தாக்கு உருவாகியபோது அதனால் வீசியெறியப்பட்ட மண் குவியல் மற்றும் பனி நெடுந்தூரத்திற்கு பரவிக் காணப்படுகிறது. காலநிலை மாற்றத்தின் விளைவாகவே சைபீரியா எங்கும் இவ்வாறான மர்ம துளைகள் தோன்றி வருவதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

நிலத்திற்கு அடியில் பல்லாயிரம் ஆண்டுகளாக சிக்கியிருந்த மீத்தேன் வாயு திடீரென வெடிப்பதாலேயே இவ்வாறான பள்ளம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

2014 ஆம் ஆண்டு இந்த நூதன சம்பவம் முதல் முறை பதிவானது தொடக்கம் யமல் தீபகற்பத்தில் அவதானிக்கப்படும் 17 ஆவது பள்ளம் இதுவாகும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டது இவைகளில் மிகப் பெரியதாகும்.

Thu, 09/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை