டிரம்ப்பின் இளைய சகோதரர் மரணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் இளைய சகோதரர் ரொபர்ட் டிரம்ப் தனது 71 ஆவது வயதில் காலமானார்.

ரொபர்ட் தம்முடைய சகோதரர் மட்டுமல்ல, சிறந்த நண்பர் என்று ஜனாதிபதி டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அவரது மரணத்திற்கு ஒரு தினத்திற்கு முன் டிரம்ப் அவரை சந்திக்க நியூயோர்க் சென்றிருந்தார். “அவர் கடினமான தருணத்தில் உள்ளார்” என்று அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் பற்றி எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் கடந்த சில மாதங்களாகவே அவர் நோய்வாய்ப்பட்டிருப்பதாக சி.என்.என். செய்தி நிறுவனம் கூறியது.

டொனால்ட் டிரம்ப்புக்கு இரண்டு ஆண்டுகளின் பின் பிறந்த ரொபர்ட், பிரெட் மற்றும் மெர்ரி ஆன் டிரம்ப் தம்பதியின் ஐந்து குழந்தைகளில் கடைசியானவராவார்.

ரொபர்ட் டிரம்ப் தமது குடும்பத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை பார்த்து வந்தார்.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை