ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்து தயார்

ரஷ்யா கொரோனாவுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை உற்பத்தியை ஆரம்பித்து சில மணிநேரத்துக்குள் தடுப்பு மருந்துகளின் முதற்தொகுதி தயாராகிவிட்டதாக ரஷ்ய சுகாதார அமைச்சு தெரிவித்தது. கமலெயா ஆய்வு நிலையம் அதனை உருவாக்கியுள்ளது.

வைரஸ் தொற்றுக்கு எதிரான முதல் தடுப்பு மருந்து இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று ரஷ்யா ஏற்கனவே கூறியிருந்தது.

பொதுவாக எந்தவொரு தடுப்பு மருந்துக்கும் ஒப்புதலைப் பெறும் முன்னர், அது இறுதிக்கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். அத்தகைய சோதனைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.

ஆனால் இறுதிக்கட்டச் சோதனைகள் நிறைவடையும் முன்னரே தடுப்பு மருந்து தயாரிப்புக்கு ரஷ்யா ஒப்புதலை வழங்கியுள்ளது. அதனால் தடுப்பு மருந்தின் பாதுகாப்பு குறித்து முழுமையாக மறுஆய்வு செய்வது அவசியம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Mon, 08/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை