உலகின் வயதான ஆண் காலமானார்

உலகில் மிக வயதான ஆண் என்று நம்பப்படும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த பிரெடி பிளோம் 116 ஆவது வயதில் காலமானார்.

அடையாள ஆவணத்தில் 1904 ஆம் ஆண்டு மே மாதம் கேப் டவுனில் பிளோம் பிறந்ததாக தெரிந்தபோதும், உலக சாதனை புத்தகமான கின்னஸ் அதனை உறுதி செய்யவில்லை.

அவர் தமது பதின்ம வயதில் இருக்கும்போது 1918இல் ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றினால் முழு குடும்பத்தையும் இழந்துள்ளார். இரண்டு உலகப் போர்கள் மற்றும் இனப்பாகுபாட்டில் இருந்து உயிர் தப்பியுள்ளார்.

தமது நீண்ட கால வாழ்வுக்கு எந்த குறிப்பிடத்தக்க இரகசியமும் இல்லை என்று அவர் 2018 ஆம் ஆண்டு பி.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது குறிப்பிட்டிருந்தார். அவர் மதுபானம் அருந்துபவராகவும் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டவராகவும் இருந்துள்ளார்.

தமது வாழ்வின் பெரும்பகுதியை ஒரு தொழிலாளராக கழித்த பிளோம் 80 வயதுகளிலேயே ஓய்வு பெற்றார்.

அவர் இயற்கை காரணத்தால் கடந்த சனிக்கிழமை கேப் டவுனில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை