டிரம்ப்பின் தடை உத்தரவை எதிர்த்து டிக் டொக் வழக்கு

டிக் டொக் செயலியைத் தடைசெய்ய வழிவகுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் அதன் உரிமை நிறுவனமான பைட்டான்ஸ் வழக்குத் தொடுக்கவுள்ளது.

தேசியப் பாதுகாப்பிற்கு டிக் டொக் செயலி மிரட்டலாய் உள்ளதாக அமெரிக்கா குறைகூறி வருகிறது.

சீனாவின் டிக் டொக் செயலியின் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனத்துடனான வர்த்தகப் பரிமாற்றங்களைத் தடைசெய்யும் செயலாக்க உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் இம்மாதம் 6ஆம் திகதி கையெழுத்திட்டார்.

45 நாட்களுக்குள் அமெரிக்கர்கள் பைட்டான்ஸ் நிறுவனத்துடனான வர்த்தகப் பரிமாற்றங்களை முடித்துகொள்ளவேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வாரத்தில் டிக் டொக் சட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று சீனாவின் டென்சென்ட் நிறுவனத்திற்கு சொந்தமான வீசாட் செயலியும் டிரம்பின் தடைக்கு எதிராக கடந்த 21ஆம் திகதி தனியாக ஒரு வழக்கை தாக்கல் செய்துள்ளது.

Mon, 08/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை