அரபு உலகில் முதல் அணு உலை திறப்பு

அரபு உலகத்தின் முதல் அணு உலை ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள பரக்காவில் திறக்கப்பட்டுள்ளது.

கட்டாருக்கு கிழக்கே பரக்காவில் வளைகுடா கடற்பகுதியில் இந்த அணு உலை அமைந்துள்ளது.

நான்கு உலைகளை கொண்ட இந்த பரக்கா அணு வளாகத்தில் முதல் அணு உலை மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தென் கொரிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அணு உலை அமைக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டே இந்த அணு உலை செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக இந்த அணு உலை இயக்கம் ஆரம்பிப்பதில் தாமதமானது.

எண்ணெய் வளம் மிக்க ஐக்கிய அரபு இராச்சியம் தங்களது மின்சார தேவையில் 25 வீதத்தை இந்த அணு உலையை சார்ந்து இருக்கத் திட்டமிடுகிறது.

Mon, 08/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை