உலகின் மிகச் சிறிய பறக்கும் கார் அறிமுகம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பறக்கும் கார் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டுள்ளது. 

அதற்கென வடிவமைக்கப்பட்ட சோதனைக் களத்தில் சுமார் 4நிமிடம் அந்தக் கார் பறந்தது. ஸ்கை ட்ரைவ் நிறுவனம் தயாரித்துள்ள பறக்கும் காரின் நீளம் நான்கு மீற்றர்களாகும். அகலமும் உயரமும் முறையே இரண்டு மீற்றர்கள். அதுவே உலகில் மிகச் சிறிய பறக்கும் கார் என்று ஸ்கை ட்ரைவ் நிறுவனம் கூறியது. வழக்கமான இரண்டு கார்களை நிறுத்துவதற்குத் தேவையான இடம், ஒரு பறக்கும் காரைத் தரையிறக்குவதற்குப் போதுமானது. 

இன்னும் மூன்று ஆண்டுகளில் பறக்கும் கார் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த பறக்கும் கார் இருந்த இடத்தில் இருந்து அப்படியே மேல் எழும்புவதற்கும், அதேபோன்றே தரை இறங்குவதற்கான தொழில்நுட்பத்தை பெற்றுள்ளது. ஓடுபாதை தேவையில்லை என்பது இதன் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. வீட்டில் இருந்து அலுவலகம் செல்லும் பெரும் தொழிலதிபர்களுக்கு இது சிறந்ததாக அமையும்.   

Mon, 08/31/2020 - 15:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை