‘பொஸ்னிய கசாப்புக்காரர்’ மிலாடிக் மேன்முறையீடு

பொஸ்னிய சேர்பிய முன்னாள் இராணுவத் தளபதி ரட்கோ மிலாடிக் தம் மீதான இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றத்தை எதிர்த்து ஹேகிலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் மற்றும் மிலாடிக்கின் உடல்நிலை காரணமாக பல தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு நாள் மேன்முறையீட்டு விசாரணை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

78 வயதான மிலாடிக்கின் தலைமையிலான இராணுவம் 1990களில் பொஸ்னிய யுத்தத்தின்போது பொஸ்னிய முஸ்லிம்களை படுகொலை செய்ததாக குற்றம் காணப்பட்டுள்ளது.

‘பொஸ்னியாவின் கசாப்புக்காரர்’ என்று அழைக்கப்படும் மிலாடிக்கிற்கு கடந்த 2017 நவம்பர் மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முகக்கவசத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த மிலாடிக், இன்று 10 நிமிடங்கள் பேசவுள்ளார். இதில் பெரும்பாலான நீதிபதிகள் வீடியோ இணைப்பு மூலமே விசாரணையில் பங்கேற்றனர்.

முன்னதாக 7,000க்கும் அதிகமான பொஸ்னிய ஆண்கள் மற்றும் சிறுவர்களை கொலை செய்ததில் மிலாடிக்கிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு இருப்பதாக குற்றங்காணப்பட்டிருந்தது.

Wed, 08/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை