அமெரிக்காவில் கறுப்பினத்தவர் கொலையால் புதிய போராட்டம்

கறுப்பினத்தவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்காவின் விஸ்கொசினில் இரண்டாவது நாளாகவும் கட்டடங்கள் மற்றும் கார்கள் தீக்கிரையாக்கப்பட்டு மோதல் இடம்பெற்றுள்ளது.

29 வயதான ஜகப் ப்ளெக் என்ற அந்த கறுப்பின இளைஞர் தனது கார் வண்டியை நோக்கிச் சென்று அதன் கதவை திறக்கும்போதே பொலிஸார் பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸாரை கண்டித்தும் நிறவெறிக்கு எதிராகவும் போராட்டம் வெடித்துள்ளது.

இதனை அடுத்து உள்ளூர் பொலிஸாருக்கு உதவியாக தேசிய காவல் படைக்கு ஆளுநர் டோனி எவர்ஸ் அழைப்பு விடுத்துள்ளார். நகரில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டபோதும் அதனை சில ஆர்ப்பாட்டக்காரர்கள் மீறியுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மே மாதம் மினசொட்டாவில் ஜோர்ஜ் பிளொயிட் என்ற கறுப்பினத்தவர் பொலிஸாரின் பிடியில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து நிறவெறி மற்றும் பொலிஸ் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்கா எங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 08/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை