பாராளுமன்ற ஆரம்பவிழா நிகழ்வை எளிமையாக நடத்த ஜனாதிபதி பணிப்பு

ஆடம்பர செலவுகளை குறைத்து பாரம்பரியத்துக்கு முன்னுரிமை

9 ஆவது பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்து வைக்கும்  நடவடிக்ைககள்  பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கி ஒரு எளிய முறையில் விழாவை ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளார். 

புதிய பாராளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி வருகையை ஆடம்பர செலவுகள் இன்றி முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். வழமையாகப் புதிதாக பாராளுமன்றத்திற்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு இராணுவ மற்றும் குதிரை அணி வகுப்பு உட்படப் பிரமாண்ட வரவேற்பு வழங்கப்படும். 

ஆனால் இம்முறை 20 ஆம் திகதி புதிய பாராளுமன்ற கூட்டத் தொடரின் ஆரம்ப விழா மிகவும் எளிமையான முறையில் நடத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராணுவ அணிவகுப்பு, பாதுகாப்பு அணிவகுப்பு மற்றும் பாராளுமன்ற வீதியின் இருபுறமும் இராணுவ அணி வகுப்பு செலுத்துமாறு பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். 

இந்த முறை குதிரை அணிவகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

Tue, 08/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை