திடீர் மின்துண்டிப்புக்கு அமைச்சு பொறுப்பு எனில் உடன் பதவி விலகல்

குழு அறிக்ைக இன்று வெளியாகும் நிலையில் டளஸ் சவால்

கடந்த வாரம் நாட்டில் மின் துண்டிக்கப்பட்டது தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று தனது அறிக்கையை மின்சக்தி அமைச்சர் டளஸ் அலஹப்பெருமவிடம் கையளிக்க இருப்பதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்தது.

கடந்த திங்கட் கிழமை நாடுபூராவும் திடீர் மின்துண்டிப்பு ஏற்பட்டது. கெரவலபிட்டியவில் ஏற்பட்ட மின்சார கோளாறையடுத்து பல மணிநேரம் மின்துண்டிப்பு இடம்பெற்றது.இதனை தொடர்ந்து 5 நாட்கள் நாடுபூராவும் காலையிலும் இரவிலும் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க மின்சக்தி அமைச்சர் குழுவொன்றை நியமிக்குமாறு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.  இந்தக் குழு இன்று தனது அறிக்கையை கையளிக்கும் என அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சர் டளஸ் அலஹப்பெரும, இந்த பிரச்சினைக்கு மின்சக்தி அமைச்சு தான் பொறுப்புக்கூற வேண்டும் என்று உறுதியானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க பின்நிற்க மாட்டேன்.

நான் 96 மணித்தியாலங்களே இருந்துள்ளேன். மின்சக்தி அமைச்சே தவறுக்கு காரணம் என்றால், நாளை செவ்வாய்க்கிழமையிலிருந்து மின்சக்தி அமைச்சிற்கு வேறு ஒருவர் அமைச்சராக இருப்பார்.

தவறுக்கு பொறுப்பேற்று பதவி விலகி முன்மாதிரியாக செயற்படுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Mon, 08/24/2020 - 01:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை