அமெரிக்காவில் கொரோனா பரவலில் அசாதாரண சூழல்

அமெரிக்கா அசாதாரணமான வைரஸ் பரவலை எதிர்கொள்ளும் புதிய கட்டத்தில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 14 மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தைத் தெரிந்து கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்றை முறியடிப்பதற்கான வெள்ளை மாளிகைப் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் டொக்டர் டேபோரா பர்க்ஸ் இவ்வாறு கூறினார்.

“இந்த வைரஸ் தொற்று தற்போது மாறுபட்டுள்ளது. அது கிராமம் மற்றும் நகர்புறங்களில் மேலும் பரவுகிறது” என்று அவர் குறிப்பட்டார்.

வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள வட்டாரங்களில் வசிக்கும் மூத்தவர்களும், வேறு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களும், வீடுகளில் இருக்கும்போதும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு டொக்டர் பர்க்ஸ் வலியுறுத்தினார்.

உலகில் வைரஸ் தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. அங்கு 4.6 மில்லியனுக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் அவதிப்படுகின்றனர். 154,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

அண்மைய வாரங்களில் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அடிக்கடி 50,000ஐத் தாண்டியது.  

Tue, 08/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை