சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கை மாற்றியமைக்கப்படும்

ஜனாதிபதி தெரிவிப்பு

நான்கு பாரிய நகரங்களில் துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை மையப்படுத்தி “சி வடிவம்” கொண்ட பொருளாதார கொரிடோவை நிர்மாணித்து சர்வதேச வியாபாரத்துடன் போட்டியிடுகின்ற நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்

சர்வதேச தொடர்பு மத்திய நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள “நான்கு பாரிய நகர” திட்டத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தையும் இணைப்பதாகவும் தெரிவித்தார். கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை “நான்கு பாரிய வர்த்தக நகரத்” திட்டத்தில் உள்வாங்கப்படும் ஏனைய மாவட்டங்களாகும்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் நேற்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மஹனாகபுர மற்றும் லுனுகம்வெஹெர மகா வித்தியாலயங்களில் நிலவுகின்ற குறைபாடுகள் குறித்தும் ஜனாதிபதி தனது அவதானத்தை செலுத்தினார்.

பல கிராமங்களுக்கு செல்ல பஸ் வண்டி ஒன்றை பெற்றுக்கொள்ளல், களஞ்சியசாலையில் இருந்து நேரடியாக உரத்தை பெற்றுக்கொள்ளல் போன்ற வேண்டுகோள்களை மக்கள் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.

05 வயதுடைய சிறுமி பி.ஜீ.பசங்கி கொவிட் நிதியத்திற்காக பண உண்டியல் ஒன்றை கையளித்தார்.

Mon, 08/03/2020 - 08:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை