வாழைச்சேனை கடதாசி ஆலையின் முதற்தொகுதி உற்பத்தி

நேற்று சந்தைக்கு விநியோகம்

நீண்ட கால எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் முதலாவது தொகுதி கடதாசிகள் நேற்று விற்பனைக்காக சந்தைக்கு விடப்பட்டன.

வருடாந்தம் 100 பில்லியன் வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நாட்டின் கடதாசி உற்பத்தித் துறையை புதிய யுகத்துக்கு இட்டுச் செல்லும் வகையில் இந்த செயற்பாடு அமைவதாக கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அனுருத்த பண்டார தெரிவித்துள்ளார்..

அதற்கமைய நீண்டகாலம் மூடப்பட்டுக் கிடந்த வாழைச்சேனை காகித ஆலை தற்போதைய அரசாங்கத்தினால் மீள புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட நிலையில் அதன் முதலாவது தொகுதி உற்பத்தி கடதாசிகளே  நேற்றைய தினம் சந்தைக்கு விடப்பட்டது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற இந்த  முக்கிய நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிரதிநிதியாக அவரது சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்கவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் சார்பில் அவரது பிரதிநிதியாக பிரதமரின் செயலாளர் காமினி செனரத்

தும் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன்அச்சுப் பதிப்புத் துறையின் முக்கியஸ்தர்கள் மற்றும் அத்துடன் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Mon, 08/03/2020 - 08:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை