களனி பல்கலை ஓகஸ்ட் 19 முதல் திறப்பு

- விடுதியில் தங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு

களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என, களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, விடுதி வசதியை பெற்றுக்கொண்டுள்ள மாணவர்கள்  நாளை மறுதினம் (18) மாலை 5.00 மணிக்கு முன்னராக விடுதிக்கு வருகை தர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக,  களனி பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Sun, 08/16/2020 - 11:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை