அமெரிக்காவில் கொரோனா உச்சம்

அமெரிக்காவில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 60,000க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்–19 நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை மட்டும் அங்கு 900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நோய்த்தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா தடுமாறி வருகிறது. அமெரிக்காவில் முன்பு பிறப்பிக்கப்பட்ட முடக்க நிலையால் பல மில்லியன் பேர் வேலை இழந்தனர், அதனால் தற்போது அங்கு மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புளோரிடா மாநிலத்தில் சுமார் 10,000 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. டெக்சாஸில் 9,500க்கும் மேற்பட்டோரும் கலிபோர்னியாவில் 8,500க்கும் அதிகமானோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Fri, 07/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை