உலகில் கொரோனா தொற்று 12 மில்லியனாக அதிகரிப்பு

உலகில் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பங்கள் கடந்த புதன்கிழமை 12 மில்லியனை எட்டியது. கடந்த ஏழு மாதங்களில் அந்த நோய்த் தொற்றினால் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் இந்த வைரஸ் காற்றின் ஊடாக பாரவுவதற்கான ஆதாரங்களும் வலுத்துள்ளன.

ஆண்டுதோறும் பதிவாகும் கடுமையான காய்ச்சல் நோயை விடவும் கொவிட்–19 நோய்த் தொற்று சம்பவங்கள் மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

வைரஸ் பரவல் குறைந்த நிலையில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பலதும் முடக்க நிலையை தளர்த்தி இருந்தபோதும் சீனா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து முடக்க நிலை மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து கிடைக்கப்பெறும் வரை பணிகள் மற்றும் சமூக வாழ்வில் மாற்றங்கள் நீடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

முதல் கொரோனா நோய்த் தொற்று சம்பவம் கடந்த ஜனவரி ஆரம்பத்தில் சீனாவில் பதிவான நிலையில் அது ஆறு மில்லியனை எட்டுவதற்கு 149 நாட்கள் எடுத்துக் கொண்டன. எனினும் அடுத்த 39 நாட்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி 12 மில்லியனைத் தொட்டுள்ளது.

இதுவரை வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 546,000க்கும் அதிகமாகும். இது உலகெங்கும் ஆண்டுக்கு கடும் காய்ச்சலினால் உயிரிழக்கும் எண்ணிக்கைக்கு சமமாகும்.

கொரோனா வைரஸ் தொற்று தோன்றிய சீனாவின் வூஹான் நகரில் கடந்த ஜனவரி 10 ஆம் திகதியே முதல் உயிரிழப்பு பதிவானது. இதனை அடுத்து ஐரோப்பாவில் அதிகரித்த உயிரிழப்பு பின்னர் அமெரிக்காவில் உச்சம் பெற்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 3 மில்லியன் நோய்த் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழப்பு ஒன்றரை இலட்சத்தை நெருங்குகிறது.

Fri, 07/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை