மேற்கிந்திய தீவு வீரர்களுக்கு பிரபல வீரர்கள் பாராட்டு

முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்றதற்கு இந்திய அணி தலைவர் கோஹ்லி, ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.கொரோனா காரணமாக தடைப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜூலை 8 ம் திகதி ஆரம்பமாகியது. இதற்காக இங்கிலாந்து சென்ற மேற்கிந்திய தீவு அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 204, மேற்கிந்திய தீவு 318 ஓட்டங்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 313 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் 200 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி, 6 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு பல பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்திய அணி கேப்டன் கோஹ்லி, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட செய்தியில்,வாவ்,. மேற்கிந்திய தீவு கிரிக்கெட், என்ன ஒரு சிறப்பான வெற்றி, டெஸ்ட் போட்டியை இப்படித்தான் விளையாட வேண்டும் என காட்டியுள்ளீர்கள், என தெரிவித்துள்ளார்.இந்திய ஜாம்பவான் சச்சின் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில்,இரு அணியிலும் வீரர்கள் சிறப்பான முறையில் திறமை வெளிப்படுத்தினர். டென்ஷனான நேரத்தில் பிளாக்வுட் சிறப்பாக விளையாடியது, மேற்கிந்திய தீவு வெற்றிக்கு காரணமானது. இந்திய முன்னாள் வீரர் லட்சுமண் கூறுகையில், மேற்கிந்திய தீவு அணியை ஹோல்டர் நன்கு வழிநடத்துகிறார். இவரது வீரர்கள் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தினர். எப்படி வெற்றி பெறுவது என மேற்கிந்திய தீவு அணி காட்டி விட்டது, என்றார்.

இலங்கை முன்னாள் தலைவர் சங்கக்கார கூறுகையில்,மீண்டும் கிரிக்கெட் திரும்பிவிட்டது என்பதை அழகாக நினைவுபடுத்தியது முதல் டெஸ்ட்,என்றார்.இங்கிலாந்து அணி முன்னாள் தலைவர் மைக்கேல் வோகன் கூறுகையில்,டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு சிறந்த வாரமாக இது அமைந்தது. இக்கட்டான நிலையில் வந்து வியக்கத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியது மேற்கிந்திய தீவு. இதை நம்ப முடியவில்லை, என்றார்.

பாராட்டிய மேற்கிந்திய தீவு பிரபலங்கள்

விவியன் ரிச்சர்ட்ஸ்

நீண்ட இடைவெளிக்குப் பின் களமிறங்கிய முதல் போட்டியை நமக்காக வென்று விட்டீர்கள், சிறுவர்களிடம் இருந்து சில அபாரமான திறமை வெளிப்பட்டுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான தகுதி மேற்கிந்திய தீவு அணிக்கு இருந்தது. எங்களை பெருமைப்பட வைத்து விட்டீர்கள், வாழ்த்துக்கள்.

பிரையன் லாரா

சிறந்த டெஸ்ட் வெற்றி இது. பயிற்சியாளர்கள் வீரர்களை சிறப்பான முறையில் தயார் செய்துள்ளீர்கள். ஹோல்டர் அணிக்கு வாழ்த்துக்கள்.

சில முக்கிய வீரர்களிடம் இருந்து வெளிப்பட்ட திறமை தான் இந்த வெற்றிக்கு காரணம். தலைவர், பயிற்சியாளர், வீரர்களுக்கு பாராட்டுகள். இயான் பிஷப்

கேபிரியல், பிளாக்வுட் வெற்றிக்கு சிறப்பான முறையில் கைகொடுத்தீர்கள். இன்னும் இரண்டு டெஸ்ட மீதமுள்ளன. இருப்பினும் தொடரை சிறப்பான முறையில் துவக்கியதற்கு பாராட்டுகள்.

ஹோல்டர் பாராட்டு மேற்கிந்திய தீவு தலைவர் ஹோல்டர் கூறுகையில்,முதல் டெஸ்டில் கேபிரியல் சாதித்தது எங்களுக்கு ஆச்சர்யம் தரவில்லை. அவர் உடற்தகுதியுடன் இருந்தால் போதும், சிறப்பாக செயல்படுவார் என்பதை இப்போட்டியில் 9 விக்கெட் சாய்த்து நிரூபித்து விட்டார். இந்த வெற்றியின் ஒவ்வொரு பகுதியிலும் இவருக்கு பங்குண்டு, என்றார். வருத்தம் இல்லை இங்கிலாந்து அணி தலைவர் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில்,முதன் முறையாக தலைவராக செயல்பட்டது மகிழ்ச்சி. எனது அணியில் சேர்க்கவில்லை என ஸ்டூவர்ட் பிராட் வருத்தப்பட்டு பேசியிருந்தார். என்னைப் பொறுத்தவரையில் இப்படி, பிராட் பேசாமல் இருந்திருந்தால் தான் வருத்தப்பட்டு இருப்பேன். அதேநேரம் அவரை அணியில் சேர்க்காமல் விட்டதற்கு வருத்தம் இல்லை,என்றார்.

Wed, 07/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை