நல்லாட்சி அரசு பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டது

முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டார

எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வீழ்ச்சி ஆரம்பமாகுமென அநுராதபுரம் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவித்தார். 

கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நோக்கில் நல்லாட்சி அரசு பாரிய அபிவிருத்தி பணியினை மேற்கொண்டிருந்தது. ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஜனநாயகத்தை மதித்தும் சுய உரிமைகளை பாதுகாக்கவும் முன்னிற்கின்ற சிவில் சமூகம் உள்ளிட்ட பலர் ராஜபக்ஷ யுகத்தை விரும்பாத இந்நாட்டின் பெரும்பாலான மக்கள் பல எதிர்பார்ப்புக்களுடன் கடந்த 2015 ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.

ஆனாலும் அவர் மக்களின் எதிர் பார்ப்புக்களை வீணாக்கி ராஜபக்ஷவினருக்கு சோரம் போனபோதும் தடைகள் பல விதித்தபோதும் அரசாங்கம் மக்களுக்கு மகத்தான பணிகளை செய்தது.    

அரச மற்றும் தனியார் துறையினருக்கு சம்பள உயர்வை பெற்றுகொடுத்தோம்.எரிபொருளின் விலையை குறைத்தோம்.மருந்து விலைகளை குறைத்தோம்.இதனால் இலாபம் ஈட்ட முடியாத பல வைத்தியர்கள் ராஜபக்ஷக்களுடன் இணைந்து அரசை வீழ்த்த சதி செய்தனர். 

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர் 

Mon, 07/27/2020 - 06:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை