மாணவர்களின் நன்மை கருதி பரீட்சை முறையில் மாற்றம்

லேக் ஹவுஸ் நிறுவன கல்வி வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் டளஸ்

மாணவர்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி தற்போதைய பரீட்சை முறையை மாற்றியமைப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக கல்வி, விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும நேற்றுத் தெரிவித்தார்.

பாடசாலைப் பிள்ளைகளின் நலன்களை முன்னிலைப்படுத்தி லேக் ஹவுஸ் சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் பிரகாரம் பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது நீண்ட நேரம் ஆராயப்பட்டதன் பின்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய அனைத்துப் பாடசாலைகளிலும் முதலாம், இரண்டாம் தர வகுப்புகளையும் நாடுபூராகவுமுள்ள முன்பள்ளிகளையும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி திங்கட்கிழமை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த வகுப்புகளை திறப்பதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகளிலும் சுகாதார நடைமுறைகளுக்கு கூடுதல் கவனம் செலுத்துமாறு கல்வியமைச்சுக்கும் அனைத்து மாகாண கல்வி அமைச்சுக்களுக்கும் மாகாண மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அனைத்து தேசிய கல்வி நிறுவனங்களிலும் இரண்டாம் வருடத்திற்கான போதனா வகுப்புகளை (2017/ 2019) குழுக்களுக்கான விடுதி வகுப்புகளை ஜுலை மாதம் 7 ஆம் திகதி முதல் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை மேற்கொள்ளவும் அனைத்து ஆசிரிய கலாசாலைகளில் முதலாம், இரண்டாம் வருடங்களுக்கான ஆசிரிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 7ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 3வது வருடத்திற்கான போதனைகளுக்கு (2016/ 2018) குழுக்களுக்கான பயிற்சிக் காலத்தை பூர்த்தி செய்வதற்காக ஜுலை மாதம் 7 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு இணைக்கப்படுவர். அதேபோன்று ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டுக்கான போதனைகளுக்காக (2017/ 2019) குழுக்கள் பாடசாலைகளுக்கு இணைக்கப்படவுள்ளனர்.

தேசிய கல்வியியற் கல்லூரி முதலாம் வருடத்திற்கான போதனைகளுக்கு (2018/ 2020) உள்ளக பயிற்சிகள் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்திருக்கின்றார்.

மர்லின் மரிக்கார்

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை