அல்ஜீரிய போராளிகளின் எச்சங்களை திருப்பிக் கொடுக்கிறது பிரான்ஸ்

19ஆம் நுற்றாண்டில் பிரான்ஸ் காலனிப் படைக்கு எதிராக போராடிய 24 அல்ஜீரிய போராளிகளின் எச்சங்களை அல்ஜீரியாவிடம் திருப்பிக் கொடுப்பதற்கு பிரான்ஸ் முன்வந்துள்ளது.

இராணுவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அல்ஜீரிய ஜனாதிபதி அப்துல்மஜீத் டெபுன் கடந்த வியாழக்கிழமை இதனைத் தெரிவித்தார்.

சில போராளிகளின் மண்டையோடுகள் பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

19ஆம் நூற்றாண்டில் சுமார் 40 அல்ஜீரிய போராளிகளின் மண்டையோடுகள் வெற்றிச் சின்னங்களால் பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவை பாரிஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஏழு ஆண்டு போராட்டத்திற்குப் பின்னர் 1962 ஆம் ஆண்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலனி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் பிரான்சிடம் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் பெற்றது.

அல்ஜீரியா மீதான காலனி ஆட்சியை “மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்” என்று பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் குறிப்பிட்டிருந்தார். கடந்தகால அவலங்கள் மற்றும் விரோதத்திற்கு இடையே அல்ஜீரியா மற்றும் பிரான்சுக்கு இடையிலான நல்லுறவுக்கு மக்ரோன் முயற்சித்து வருகிறார்.

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை