சுகாதார பணியாளர்களுக்கு ஹஜ் கடமையில் முன்னுரிமை

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரிகர்களை தேர்வு செய்வதில் சுகாதார தரம் முக்கியமாக கருத்தில் கொள்ளப்படும் என்று சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா தொடர்பான அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் சவூதியில் தங்கியிருக்கும் 70 வீதமானவர்கள் மற்றும் 30 வீதமான சவூதி பிரஜைகள் இம்முறை ஹஜ் கடமைக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த சுகாதார பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையைச் சேர்ந்த உள்நாட்டினர் மாத்திரமே ஹஜ் கடமைக்காக தேர்வு செய்யப்படவுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு எதிரான அவர்களின் பங்களிப்பை பாராட்டும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.   

இதன்போது கொரோனா வைரக்குஸிற்கு எதிராக முன்னின்று போராடிய நிலையில் அந்தத் தொற்றுக்கு உள்ளாகி மீண்டு வந்தவர்களின் தரவினை நிர்வாகம் பயன்படுத்தி இந்தத் தேர்வை மேற்கொள்ளவுள்ளது. 

முன்னர் ஹஜ் செய்யாத, கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட 20 மற்றும் 50 வயதுக்கு இடைப்பட்ட சவூதி பிரஜைகள் அல்லாதவர்களிடம் இருந்தே ஹஜ் யாத்திரிகர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக இம்முறை ஹஜ் கடமைக்கு வெளிநாட்டு யாத்திரிகர்களுக்கு சவூதி நிர்வாகம் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 07/08/2020 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை