தென்னாபிரிக்க தேவாலயத்தில் தாக்குதல்: ஐவர் உயிரிழப்பு

தென்னாபிரிக்க தேவாலயம் ஒன்றில் தலைமை பற்றிய விவாதத்திற்கு மத்தியில் தாக்குதல்தாரிகள் ஊடுருவிய சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜொஹன்னஸ்பேர்க் புறநகர் பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தாக்குதல்தாரிகளிடம் பிணைக்கைதியாகச் சிக்கிய பெண்கள், சிறுவர்கள் உட்பட பலரையும் மீட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது குறைந்தது 40 பேர் கைது செய்யப்பட்டிருப்பதோடு பல டஜன் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் தேவாலயத்தில் இருந்து பிரிந்து சென்ற குழு ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக பார்த்தவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு இந்த தேவாலயத்தின் முன்னாள் தலைவர் உயிரிழந்தது தொடக்கம் தலைமைக்காக போட்டி இடம்பெற்று வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு உறுப்பினர்களுக்கு இடையே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த தேவாலய வளாகத்தை கைப்பற்றும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கார்களுக்குள் சுடப்பட்டும் தீமூட்டப்பட்டும் நான்கு சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதோடு காவல் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.

Mon, 07/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை