சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் ஆளும் கட்சி அமோக வெற்றி

சிங்கப்பூரில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் லீயின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலுக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் நள்ளிரவு முதல் எண்ண ஆரம்பிக்கப்பட்டு கடந்த சனிக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் மொத்தமுள்ள 93 பாராளுமன்ற தொகுதிகளில் 83 இடங்களை மக்கள் செயல் கட்சி வென்றுள்ளது. ஆனால், 61.2 வீதம் வாக்குகளை மட்டுமே இந்தக் கட்சி பெற்றுள்ளது. 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 69 வீத வாக்குகளை இந்தக் கட்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 10 தொகுதிகளில் வெற்று பெற்று சுமார் 40 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது.

1965ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் நடைபெற்ற அனைத்துப் பொதுத் தேர்தலிலும் மக்கள் செயல் கட்சியே தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வருகிறது.

கெரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக பிரதமர் லீ சியென் லுௗங் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களிடையே எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மீண்டும் லீ சியென் லுௗங் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

Mon, 07/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை