ஹிஸ்புல்லா, இஸ்ரேல் இடையே எல்லையில் பதற்றம் அதிகரிப்பு

இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்ற ஹிஸ்புல்லா போராளிகள் மீது இஸ்ரேலிய இராணுவம் சூடு நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் ஆக்கிரமித்த சிரியாவின் கோலன் குன்றின் ஒரு பகுதியான டோவ் மலைப்பிரதேசத்தில் சுமார் நான்கு போராளிகள் எல்லையை கடந்ததாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஹிஸ்புல்லா வெளியிட்ட அறிவிப்பில், தாம் எந்த மோதலிலும் ஈடுபடவில்லை என்றும் இஸ்ரேலை பயப்படும் எதிரி என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஹிஸ்புல்லா போராளி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இந்தப் பகுதியில் பல நாட்களாக பதற்றம் நீடித்து வருகிறது. சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சம்பவத்தில் இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து “தீவிரவாதிகள் லெபனானுக்கு திரும்பிச் சென்றனர்” என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.

“ஹஸ்புல்லா நெருப்புடன் விளையாடுகிறதை தெரிந்துகொள்ள வேண்டும்” என்று நெதன்யாகு தொலைக்காட்சியில் உரையாற்றும்போது எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஊடுருவலில் ஈடுபடவில்லை என்று ஹிஸ்புல்லா மறுத்தபோதும், தமது போராளியின் உயிரிழப்புக்கு பதலடி நிச்சம் கிடைக்கும் என்று எச்சரித்துள்ளது.

ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது எல்லை தாண்டி நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே 2006 ஆம் ஆண்டு ஒரு மாத காலம் போர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை