ஹொங்கொங் உடனான ஒப்பந்தம்: நியூசிலாந்து அரசு இடைநிறுத்தம்

ஹொங்கொங்கில் சீனா அமுல்படுத்தி இருக்கும் புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் காரணமாக அந்த நகருடனான நாடுகடத்தல் ஒப்பந்தத்தை நியூசிலாந்து இடைநிறுத்தியுள்ளது.

கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்த சட்டத்தின் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களை இலகுவாக தண்டிக்க முடியும் என்பதோடு ஹொங்கொங்கின் சுயாட்சி அதிகாரங்களையும் குறைக்கிறது.

நியூசிலாந்தின் பயண ஆலோசனையிலும், அந்நாட்டு மக்கள் புதிய சட்டத்தால் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனினும் நியூசிலாந்தின் முடிவு சீன உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக இருக்கும் என்று நியூசிலாந்துக்கான சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. கனடா, அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் நாடுகளும் ஏற்கனவே ஹொங்கொங் உடனான நாடுகடத்தல் தொடர்பான ஒப்பந்தங்களை இடைநிறுத்தியுள்ளன.

நியூசிலாந்தில் இருந்து ஹொங்கொங்கிற்கான இராணுவ மற்றும் இரட்டை பயன்பாட்டு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப ஏற்பமதிகளில் சீனா ஏற்றுமதியின்போது கடைப்பிடிக்கும் அம்சங்களே இனி கடைப்பிடிக்கப்படும் என்று நியூசிலாந்து குறிப்பிட்டுள்ளது.

ஹொங்கொங்கில் இடம்பெற்று வரும் பாரிய ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டம் மற்றும் அதனை ஒட்டிய வன்முறைகளுக்கு மத்தியில் அந்த நகரில் சட்ட ஒழுங்கை கொண்டுவர இந்த புதிய சட்டங்கள் அவசியமாக இருப்பதாக ஹொங்கொங் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை