தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் மூன்று தினங்களுக்குள் பகிர்வு

தபால் மூலம் வாக்குகளை அளிப்பதற்கான வாக்குச் சீட்டுக்கள் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் நாடுமுழுவதும் உரிய அத்தாட்சிட்சிப்படுத்தலுடன் பகிர்ந்தளிக்கப்பட்டு விடும் என அஞ்சல் திணைக்களத்தின் ஆணையாளர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.  

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு, எதிர்வரும் 13ஆம், 14ஆம், 15ஆம், 16ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. 

குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அரசாங்க ஊழியர்கள், எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம், 21ஆம் திகதிகளில் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் தபால்மூல வாக்களிப்பில் ஈடுபட முடியும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்நிலையில், இன்று திங்கட்கிழமைமுதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் தபால்மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டுவிடும் என அஞ்சல் திணைக்களத்தின் ஆணையாளர் ரஞ்ஜித் ஆரியரத்ன தெரிவித்துள்ளதார். உரிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட அத்தாட்சி அதிகாரி ஊடாக வாக்குச் சீட்டுகள் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகத்தின் பணிப்பாளர் ரஞ்சனி லியனகே தெரிவிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது. 

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Mon, 07/06/2020 - 07:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை