ஜெர்மனியில் இருந்து 9,500 அமெரிக்க துருப்புகள் வாபஸ்

ஜெர்மனி முகாம்களில் இருந்து 9,500 அமெரிக்க துருப்புகளை வாபஸ் பெறும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை மூலம் ஜெர்மனியில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை 35,500 இல் இருந்து 25,000 ஆக குறையவுள்ளது.

நோட்டோ அமைப்புக்கு ஜெர்மனி போதுமான பங்களிப்புச் செய்வதில்லை என்று டிரம்ப் முன்னதாக குற்றம்சாட்டி இருந்தார். எனினும் இந்த படைகள் எப்போது வாபஸ் பெறப்படும் என்ற விபரம் மற்றும் திகதியை பெண்டகன் பேச்சாளர் குறிப்பிடவில்லை.

எனினும் சில வீரர்கள் போலந்திற்கு நகர்த்தப்படுவார்கள் என்று டிரம்ப் கடந்த வாரம் கூறியிருந்தார்.

நோட்டோ அமைப்புக்கு அமெரிக்கா அதிகப்படியாக பங்களிப்புச் செய்வதாகவும் ஏனைய உறுப்பு நாடுகள் மேலும் செலவிட வேண்டும் என்றும் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதில் அவர் ஜெர்மனியை குறிப்பிட்டு குற்றம்சாட்டுகிறார்.

இரண்டாவது உலகப் போருக்கு பின்னரான ஒரு மரபாகவே ஐரோப்பாவில் அதிகபட்சமான அமெரிக்கத் துருப்புகள் ஜெர்மனியில் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை