பாடகர் கொலை: எத்தியோப்பிய ஆர்ப்பாட்டங்களில் 50 பேர் பலி

எத்தியோப்பியாவில் பிரபல பாடகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து ஒரோமியா பிராந்தியத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹாகாலு ஹுன்டீசா என்ற அந்தப் பாடகர் கடந்த திங்கட்கிழமை இரவு சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதோடு அது ஒரு திட்டமிட்ட கொலை என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அடுத்த நாள் காலையில் ஒரோமியா பராந்திய தலைநகர் மற்றும் ஏனைய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

இதன்போது ஏற்பட்ட வன்முறைகளில் கொல்லப்பட்டவர்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் அடங்குவதாக பிராந்திய அரசின் பேச்சாளர் கெடாசெவ் பல்கா குறிப்பிட்டுள்ளார். சில கடைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. “இதற்கு நாம் தயாராக இருக்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டார்.

தலைநகர் அடிடாஸ் அபாபாவில் பொலிஸார் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் மூன்று குண்டு வெடிப்புகளில் மேலும் பலர் பலியாகி இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஹாகாலுவின் பாடல்கள் நாட்டின் ஒரோமோ இனக் குழுவின் உரிமைக் குரல்களாக பார்க்கப்படுவதோடு, 2018 ஆம் ஆண்டு எத்தியோப்பிய முன்னாள் பிரதமர் பதவி கவிழ்க்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களுக்கு இவரது பாடல்களும் உந்துதலாக இருந்துள்ளன.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை