கூட்டமைப்பினால் ஏமாற்றப்பட்ட மக்களுக்கு தீர்வு காணப்படும்

பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்; அமைச்சர் -டக்ளஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாட்சியில் ஏமாற்றப்பட்டவர்களுக்கு கரம் கொடுத்து, சிறந்த வாழ்வியல் அமைத்து கொடுக்கப்படும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மானிப்பாயில் நடைபெற்ற கட்சியின் மானிப்பாய் மற்றும் சங்கானை பிரதேசங்களின் வட்டார செயற்பாட்டாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அவரர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தலில் அதிகளவான வாக்குகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெறுவாரென நாம் கடந்த முறை சொன்னோம். அதனை மக்கள் நினைக்கவில்லை. எனினும் 16 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றிபெற்றோம். அதுபோல இந்த தேர்தலிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கு முயற்சி எடுக்கின்றோம். ஜனாதிபதி தேர்தல் காலத்துடன் ஒப்பிடும்போது தற்போது இப்பகுதியில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயற்பாடுகளில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனவே அவரது கரத்தைப் பலப்படுத்துவதற்காக எமது வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்து, எம்மை பாராளுமன்றம் அனுப்பி அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்கலாமென எமது மக்கள் நினைக்கின்றமையால் நாம் நிச்சயம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவோம்.

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை