கூட்டமைப்பு உண்மையாக செயற்படின் அரசுடன் இணைவதை வரவேற்போம்

வவுனியாவில் காதர் மஸ்தான் தெரிவிப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவளித்து நாட்டின் அபிவிருத்திக்காக உண்மையாக செயற்படுமானால் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அரசின் பங்காளிகளாவது பற்றி கலந்துரையாடலாமென முன்னாள் பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். வவுனியாவில் நேற்று முன்தினம் (15)  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டிருந்த கடந்த கால ஆட்சியின் போது, வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு முழுமையான நிதி வழங்கப்படாமல் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஜனாதிபதி தேர்தல் நெருங்கிய நிலையில் செயற்றிட்ட உதவியாளர்களாக சுமார் 1500 பேர் வடக்கு கிழக்கு பகுதியில் உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆனால் குறித்த நியமனங்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு அமைய இரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்கள் இரத்து செய்யப்படும் என்பதை தெரிந்து கொண்டே கடந்த ஆட்சியாளர்கள் தேர்தல் நோக்கங்களுக்காக வழங்கியிருந்தனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் மக்கள் கடந்த கால ஆட்சியாளர்களினால் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தலில் எமது கரங்கள் பலப்படுத்தப்படுமாக இருந்தால் அவர்களுக்கு ஏமாற்றப்பட்ட விடயங்களும் நிவர்த்தி செய்யப்பட்டு சிறந்த வாழ்வியல் உருவாக்கப்படும் என்றார்.

வவுனியா விசேட நிருபர்

Wed, 06/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை