'சபிரி கமக்' திட்டத்தில் சபை உறுப்பினர்கள் தலையிடாதீர்கள்

சாவகச்சேரி பிரதேச சபை தவிசாளர்

தேர்தல் காலம் என்பதால் பிரதேச சபை உறுப்பினர்கள் சபிரி கமக் (நிறைவான கிராமம்) வேலைத்திட்டத்தில் தலையிடுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தெரிவித்தார்.

அண்மையில் சாவகச்சேரி பிரதேச சபையில் நடைபெற்ற மாதாந்த அமர்வில் தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்.

சபிரி கமக் வேலைத்திட்டத்தில் தற்போது அரசியல் தலையீடுகள் செய்வதனை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

தேர்தல் கால கட்டத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொறுப்புடன் நடக்க வேண்டும்.

தற்போது தேர்தல் சட்டத்தை அனுசரித்தே செல்ல வேண்டும். சபிரி கமக் வேலைத்திட்டத்தை இக் காலத்தில் சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மேற்பார்வை செய்தால் போதும் என்றார்.

சரசாலை நிருபர்

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை