நடராஜசிவமின் மறைவுக்கு பிரதமர் அனுதாபம்

அமரர் எஸ்.நடராஜசிவத்தின் மறைவுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுதாபம் தெரிவித்துள்ளார்.

அமரர் நடராஜசிவத்தின் மகனுடன் தொலைபேசியில் நேற்று உரையாடிய போதே பிரதமர் தனது கவலையையும் அனுதாபத்தையும் பகிர்ந்துகொண்டார்.

இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவரான சின்னையா நடராஜசிவம் நேற்று காலமானார்.

நேற்று இரவு 11.30 மணியளவில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தனது 74 ஆவது வயதில் அவர் காலமாகியுள்ளார். நீண்டகாலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றியவராவார். இவர் திறமை வாய்ந்த வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், மேடை நடிகராவார்.'ஒதெல்லோ', 'நத்தையும் ஆமையும்'  முதலான பல வானொலி நாடகங்களில் நடித்ததோடு, ஒலிச்சித்திரங்களிலும் பங்குபற்றியிருக்கிறார்.

 

ரூபவாஹினியில் தயாரிக்கப்பட்ட முதலாவது தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையைப்பெற்ற கலாநிதி ஜே. ஜெயமோகன் எழுதிய 'கற்பனைகள் கலைவதில்லை' என்ற நாடகத்தில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை