குளவி தாக்குதலிலிருந்து தப்ப தொழிலாளர்களுக்கு விசேட உடை

பெருந்தோட்டப் பகுதிகளில் குளவிகளின் தாக்குதலிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க டிக்கோயா தோட்ட முகாமையால் பாதுகாப்பு உடைகள் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாக குளவிக் கொட்டுக்கு இலக்காகும் சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் இவ்வருடம் இந்த குளவிக் கொட்டு காரணமாக நான்கு உயிர்கள் மலையகத்தில் இழக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் டிக்கோயா தோட்டத்தில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் தோட்ட முகாமையும் தமது தொழிலாளர்களை எவ்வாறு பாதுகாப்பதென பெரும் சவாலை எதிர்கொண்டது.

இந்த நிலையிலேயே டிக்கோயா தோட்ட முகாமையாளரின் முயற்சியின் பயனாக ஹற்றன் பெருந்தோட்ட கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளரின் வழிகாட்டலுக்கமைய ஒரு பாதுகாப்பு உடையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

குளவிகளிடமிருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் உடை நேற்று வியாழக்கிழமை நண்பகல் டிக்கோயா தோட்டத்தின் முகாமையாளரால் தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது.

கொட்டகலை தினகரன் நிருபர்

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை