பொத்துவிலில் 'உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' வீடு கையளிப்பு

பொத்துவிலில் 'உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' வீடு கையளிப்பு-New House Handed Over-Pottuvil

பயனாளியிடம் வீடு கையளிப்பு

'உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' எனும் அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் வீடற்ற நிலையில் குடியிசையில் வாழ்ந்து வந்த குடும்பம் ஒன்றுக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் புதிய வீடு  நிர்மாணிக்கப்பட்டு பயினாளியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொத்துவில் பிரதேச தொழிநுட்ப உத்தியோகத்தர் எம்.வி.நிலாம் தலைமையில் நேற்று சனிக்கிழமை (20) பொத்துவில் 15 கிராம உத்தியோகத்தர் பிரிவில் இடம்பெற்றது.

பொத்துவிலில் 'உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' வீடு கையளிப்பு-New House Handed Over-Pottuvil

இப்புதிய வீடானது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைவாக ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஆறு இலட்சம் ரூபா மானிய நிதியுதவியுடன் பயனாளியின் பங்களிப்புடன் பொத்துவில் 15ல் வாழும் எம்.வி. மீரா உம்மாவிற்கு ஜனாதிபதியின் பிறந்த தினமான நேற்று கையளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 503 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் தற்போது வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வேலைகள் இடம்பெற்று வருவதுடன் பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 27 கிராம சேவையாளர் பிரிவுகளில் 27 வீடுகளில் முதலாவது வீடு இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, கல்முனை மேலதிக மாவட்ட முகாமையாளர் ஏ.எம். இப்ராஹிம் தெரிவித்து இருந்தார்.

பொத்துவிலில் 'உங்களுக்கு ஒரு வீடு நாட்டுக்கு எதிர்காலம்' வீடு கையளிப்பு-New House Handed Over-Pottuvil

இந்நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஆர்.எம். சுபசிங்க கல்முனை மேலதிக முகாமையாளர் ஏ.எம். இப்ராஹிம் பொத்துவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.எம். ஜனூஷ் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை அலுவலக கணக்காளர் ஏ.ஏ.எம். இர்ஷாத் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ஏ. முத்தலிப் மற்றும் அம்பாறை கல்முனை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.

(திருக்கோவில் தினகரன் நிருபர் - எஸ். கார்த்திகேசு)

Sun, 06/21/2020 - 18:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை