கொவிட் – 19: பிரேசிலில் 50,000ஐ எட்டும் உயிரிழப்பு

பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,022 பேர் உயிரிழந்த நிலையில் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 50,000ஐ நெருங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் மொத்தம் 1,067,579 பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதோடு 49,976 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் சம்பவம் பதிவான நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனை எட்டியது. எனினும் பரந்த அளவில் சோதனைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் பாதிப்பு எண்ணிக்கை பல மடங்காக இருக்கலாம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை