மகேந்திரன் குறித்த பொறுப்பு ரணில் விலகவே முடியாது

முன்னாள் அமைச்சர் சம்பிக்க குற்றச்சாட்டு

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் தொடர்பிலான பொறுப்பை ரணில் விக்கிரமசிங்கவே ஏற்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார். அவரை நியமிப்பதற்கு நாம் எதிர்ப்பு வெளியிட்ட போது தனிப்பட்ட ரீதியில் அவர் தொடர்பான பொறுப்பை முன்னாள் பிரதமர் ஏற்றார்.  அதிலிருந்து அவருக்கு தப்ப முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

களுத்துறை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர்,

அர்ஜுன மகேந்திரனை நியமிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை பத்திரம் சமர்ப்பித்தார்.அதற்கு நானும் ராஜித சேனாரத்னவும் எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் தான் அவர் தொடர்பான முழுப்பொறுப்பையும் ஏற்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார். 2015 ஆரம்பத்திலேயே பிணை முறி மோசடி நடந்தது. விசாரணை நடத்துமாறு நாம் கோரினோம். ஆனால் எதுவும் செய்யாமல் ரணில் விக்கிரமசிங்க கேட்டு வாங்கிக் கொண்டார்.

2016 இல் அர்ஜுன மகேந்திரனின் பதவிக் காலம் முடிந்த போது மீண்டும் நியமிக்க நாம் எதிர்ப்பு தெரிவித்தோம். திரும்பவும் மோசடி நடந்தது.ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து அவரை நியமிப்பதை நிறுத்தினோம்.

Tue, 06/30/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை