ஜெர்மனியில் லெனின் சிலை

ஜெர்மனியில் தீவிர இடதுசாரி கட்சி ஒன்று கம்யூனிஸ்ட் தலைவர் விளாடிமிர் லெனினின் சிலை ஒன்றை எழுப்பியுள்ளது.

மேற்கு நகரான கெல்சென்கிரிசனில் ஜெர்மனியின் சிறிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி தனது தலைமையகத்திற்கு முன்னால் இந்த சிலையை எழுப்பியுள்ளது.

இந்த சிலை எழுப்புவதற்கு எதிராக ‘லெனினுக்கு இடமில்லை’ என சமூக ஊடகத்தில் பிரசாரம் மேற்கொண்டதோடு நகர நிர்வாகம் இதனை தடுக்க கடுமையாக முயன்றது.

எனினும் இந்த தடை முயற்சியை நீதிமன்றங்கள் தடுத்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிலை திறக்கப்பட்டது.

1917 ரஷ்ய புரட்சியின் தலைவராக இருந்த லெனினி 1924 இல் அவரது மரணம் வரை நாட்டில் தலைவராக செயற்பட்டார். அதனைத் தொடர்ந்தே ஜோசப் ஸ்டாலின் அவரது இடத்திற்கு வந்தார். எவ்வாறாயினும் உலகெங்கும் கம்யூனிச ஆட்சியின் அடையாளமான லெனின் பார்க்கப்படுகிறார். மறுபுறம் அவரது ஆட்சியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி பரவலாக விமர்சனங்கள் உள்ளன. 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்படும் வரை ஜெர்மனியும் மேற்கு மற்றும் கம்யூனிஸ கிழக்கு என பிளவு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை