கடந்த தேர்தலில் அதாவுல்லாவின் தோல்வி சமூகத்திற்கு பாரிய தாக்கம்

சிந்தித்து செயற்பட கோருகிறார் சட்டத்தரணி றிபாஸ்

முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா கடந்த தேர்தலில் அடைந்த தோல்வி சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல கடந்த 05 வருடங்களும் இந்த சமூகம் பட்ட இன்னல்கள் கடுமையாகவே இருந்தன என தேசிய காங்கிரசின் சட்டவிவகார கொள்கை அமுலாக்கல் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

மருதமுனை மக்களின் தேவையை நன்றாக அறிந்து அதனை தீர்க்கும் வல்லமை பெற்றவராக முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா இருந்திருக்கிறார். அவர் அக்கரைப்பற்றுக்கு செய்த சேவைகளை போன்றே அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களுக்கும் சேவை செய்திருக்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.

பெரியநீலாவணையில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் மேலும் தெரிவிக்கையில்,

ஜய்க்கா திட்டத்தின் மூலம் மருதமுனை வீதிகளில் அதிகமானவற்றை செப்பனிட காரணகர்த்தாவாக இருந்தவர் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா, அவர் அதிகாரத்திலிருந்த போது பிரான்ஸ் சிட்டி கிராமத்தை உருவாக்க காணிகளை நிரப்பித்தந்தது மட்டுமன்றி சுனாமியால் பாதித்த மக்களின் வாழ்க்கைக்கும் வழிகாட்டிய ஒருவராக இருந்தார்.

அவருக்கு நாம் நன்றிக்கடன் செலுத்தும் தேர்தலாக இந்த தேர்தலை பயன்படுத்த மருதமுனை மக்கள் தயாராக இருப்பதுடன் வெற்றிகரமாக செய்து முடிக்க முன்வர வேண்டும்.

அவரது பாராளுமன்ற பிரதிதிதித்துவம் இல்லாது போனவுடன் அதிகமாக பாதிக்கப்பட்டது நமது பிரதேசங்களே.

எமது பிரதேசத்தில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகளை தீர்த்து ஒற்றுமையாக எமது சமூகம் வாழ நாங்கள் ஒன்றிணைந்து தேசிய காங்கிரஸை ஆதரிக்க முன்வர வேண்டும். எமது மண்ணுக்கான அதிகாரங்கள் எம்மை வந்தடைய நாங்கள் இனியும் ஏமாற்று வித்தைகளுக்கு சோரம்போக கூடாது என்றார்.

 

 

Sat, 06/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை