டி.ஆர். விஜேவர்தனவின் 70 ஆவது சிரார்த்த தினம்

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகரும் இலங்கை பத்திரிகைத் துறையின் முன்னோடியுமான டி.ஆர். விஜேவர்தனவின் 70 ஆவது சிரார்த்தத் தினம் கடந்த சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.

விஜேவர்தன, மும்மொழிகளிலும் பிரசுரிக்கப்பட்ட தமது பத்திரிகைகள் மூலம் காலனி ஆட்சிக்கு எதிரான சுதந்திர அமைப்பில் முன்னின்று செயற்பட்டவராவார். அவர் வரிசையாக மூன்று மொழிகளிலும் நாளாந்த மற்றும் வாராந்த பத்திரிகைகளை ஆரம்பித்தார். இதில் தினமின மற்றும் டெய்லி நியூஸ் ஆகிய இரு பத்திரிகைகளும் நூற்றாண்டை தாண்டி தற்போதும் வெளிவருவதோடு தினகரன் பத்திரிகை 9 தசாப்தங்களை நெருங்கியுள்ளது.

குறிப்பாக தினகரன் பத்திரிகையை ஆரம்பித்ததன் மூலம் லேக் ஹவுஸ் மும்மொழி பிரசுரங்களைக் கொண்ட பத்திரிகை நிறுவனமாக வளர்ச்சி பெற்றது.

1929 ஆம் ஆண்டு அவர் தற்போதுள்ள லேக் ஹவுஸ் கட்டடத்திற்கு மூன்று மொழி பிரசுரங்களையும் கொண்டுவந்தார். பேர ஏரிக் கரையில் இருக்கும் லேக் ஹவுஸ் கட்டடம் தற்போது கொழும்பில் உள்ள வரலாற்று முக்கியம் வாய்ந்ததும் கட்டடக் கலையின் அடையாளமாகவும் மாறியுள்ளது. லேக் ஹவுஸ் நிறுவனத்தை  உயர்த்துவதற்காக தமது வாழ்வை அர்ப்பணித்த அவர், நாட்டின் மிகப்பெரிய மற்றும் அண்மைக் காலம் வரை நாட்டி மும்மொழி பிரசுரங்களைக் கொண்ட ஒரே

நிறுவனமாக லேக் ஹவுஸை உருவாக்கினார்.

பெளத்த சமயத்திற்காகவும் உயர்கல்விக்காவும் ஓய்வின்றி பாடுபட்ட ஒருவராகவும் அவரை குறிப்பிடலாம். இலங்கை பத்திரிகைத் துறையில் பெரும் ஜாம்பவானாக வர்ணிக்கப்படும் டி.ஆர். விஜேவர்தனவின் மரபு லேக் ஹவுஸில் மாத்திரமன்றி அதற்கு அப்பாலும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13 ஆம் திகதி அவர் காலமானார்.

 

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை