கொவிட்–19: லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தில் 100,000 பேர் பலி

லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100,000ஐ தாண்டி இருப்பதாக ஜோன் ஹொப்கின்ஸன் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்படும் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதில் பாதிக்கும் அதிகமான உயிரிழப்பு பிரேசிலில் பதிவாகியுள்ளது. உலகில் அதிக நோய்த் தொற்று உள்ள நாடுகள் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மெக்சியோவில் 23,300க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இரு நாடுகளும் மட்டுப்படுத்தப்பட்ட முடக்க நிலையையே கடைப்பிடித்து வருகின்றன. பெரு மற்றும் சிலி நாடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளில் முறையே 8,404 மற்றும் 4,505 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை விடவும் தற்போது நாளாந்தம் அதிக நோய்த் தொற்று பதிவாகும் பிராந்தியமாக லத்தீன் அமெரிக்கா மாறியுள்ளது.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை