உயர் தரம் கற்க Online மூலம் விண்ணப்பிக்கும் வசதி

உயர் தரம் கற்க Online மூலம் விண்ணப்பிக்கும் வசதி-Students Can Apply Online to Study GCE AL-Ministry of Education

- விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் 12
- ஒருவர் 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

2020 க.பொ.த. உயர் தரத்திற்கு உள்ளீர்க்கப்படவுள்ள மாணவர்கள், தாம் விரும்பிய பாடசாலைகளுக்கான விண்ணப்பத்தை Online மூலம் மேற்கொள்ளலாம் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை முதல் (12) www.info.moe.gov.lk எனும் இணையதளத்தில் பிரவேசித்து உயர்தரத்துக்கு அனுமதி பெற உத்தேசித்துள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

ஒரு விண்ணப்பதாரிக்கு தாம் விரும்பும் 10 பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க முடிவதோடு, அனைத்து விண்ணப்பங்களும் ஜூன் 12ஆம் திகதிக்கு முன் மேற்கொள்ளப்பட  வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Mon, 05/11/2020 - 20:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை