என் மரணத்தை அறிவிக்கவும் டொக்டர்கள் தயாராக இருந்தனர்

கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கியதில் மரணத்தின் விளிம்பு வரை போய் உயிர் பிழைத்தது பற்றி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார். என் மரணத்தை அறிவிக்கவும் டாக்டர்கள் தயாராக இருந்தனர் என்று அப்போது அவர் கூறினார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன்  கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்குதலுக்கு ஆளாகி  லண்டன் செயிண்ட் தோமஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசம் அடைந்து மரணத்தின் விளிம்புக்கு சென்றார். ஆனாலும் அங்கிருந்த டாக்டர்களும்  நர்சுகளும் தீவிர சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றினர். இப்போது அவர் முழுமையாக குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளார்.

சில தினங்களுக்கு முன்னதாக  நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரது வருங்கால காதல் மனைவி கேரி சைமண்ட்சுக்கு ஆண் குழந்தை பிறந்தது. கேரி சைமண்ட்ஸ் இன்ஸ்டகிராமில்  மகன் படத்தை வெளியிட்டுள்ளார். அவர்கள் தங்கள் மகனுக்கு வில்பிரட் லாரீ நிக்கோலஸ் ஜான்சன் என பெயர் சூட்டி உள்ளனர். இதில் நிக்கோலஸ் என்பது போரிஸ் ஜோன்சனை மரணத்தின் விளிம்பில் இருந்து காப்பாற்றிய இரு டாக்டர்களின் பெயராகும். தன்னை காப்பாற்றிய டொக்டர்களுக்கும்  தாதிகளுக்கும் தன் எஞ்சிய வாழ்நாளெல்லாம் கடமைப்பட்டிருப்பதாக போரிஸ் ஜோன்சன் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

அந்த நன்றிக்கடனை செலுத்தும் விதத்தில் தங்கள் மகனுக்கு டாக்டர்களின் பெயரையும் இணைத்து போரிஸ் ஜோன்சன்-கேரி சைமண்ட்ஸ் சூட்டி உள்ளனர்.

இந்த நிலையில் தான் மரணத்தின் விளிம்புவரை போய் உயிர் பிழைத்ததுபற்றி முதல்முறையாக சன் பத்திரிகைக்கு மனம்திறந்து சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தாக்கி செயிண்ட் தோமஸ் ஆஸ்பத்திரியில் நான் அனுமதிக்கப்பட்டிருந்த தருணம்  மிகவும் கடினமானது. நான் அதை மறுக்கவில்லை. என் மரணத்தை அறிவிக்கவும் டொக்டர்கள் தயாராகி விட்டனர் என்பதை என்னால் உணர முடிந்தது.

Tue, 05/05/2020 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை