வேற்றுமைகள் களையப்பட்ட நாடாக இருக்க வேண்டும்

மட்டக்களப்பு மறை. மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா

எமது நாடு வளங்கள் பல நிறைந்த நாடு. அது வேற்றுமைகள் களையப்பட்ட இதமான நாடாக இருக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் தத்தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென மட்டக்களப்பு மறை. மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜோசப் பொன்னையா ஆண்டகை தான் ஆயராக  திருநிலைப்படுத்தப்பட்ட 12 ஆவது ஆண்டின் தொடக்க (24மே) நாளில் நாட்டு மக்களுக்கு வழங்கிய நற் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரின் நற் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இன்றைய தினத்தில் எனது ஆயர் பணியில் 12 ஆவது வருடத்தில் கால்பதிக்கிறேன்.

ஆண்டவருடைய ஆசிர்வாதத்தால் எனது பணியை நிறைவாக செய்திருக்கிறேன். அதற்காக இறைவனுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன். இனிமேலும் எனது பணியை நிறைவாக செய்வதற்காக  ஆண்டவருடைய கருணையை வேண்டி நிற்கிறேன். நமது நாட்டில் வேற்றுமைகள் இருந்தாலும் நாட்டு மக்கள் என்ற ரீதியில் எமது தாய்நாட்டை நேசிக்கும் ஒன்றுபட்ட மக்களாக நாம் மாற்றமடைய வேண்டும் என்றார்.

புளியந்தீவுகுறூப்நிருபர்

Tue, 05/26/2020 - 09:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை