ஜனாதிபதியின் நியமனம்; எதிராக வழக்குத்தொடர சஜித்தரப்பு முஸ்தீபு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நியமனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் சிலர் தயாராவதாக அறிய வருகிறது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அண்மையில் வெளியிட்ட பெடரல் ரெஜிஸ்டரை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வழக்கு தொடர்வதன் சாத்தியம் தொடர்பாக கட்சி முக்கியஸ்கள் ஆராய்ந்துள்ளனர்.

அமெரிக்க ராஜாங்க திணைக்கள பதிவிற்கமைய கோட்டாபய ராஜபக்ஷவின் பிரஜாவுரிமை மே 08 ஆம் திகதியே இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது தவறு என்றும் இந்த பேச்சுவார்த்தைகளின் போது சுட்டிக்காட்டப்பட்டதாக அறிய வருகிறது. இரட்டை பிரஜா உரிமையிருக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டுள்ளதால் அவரின் நியமனத்தை நீதிமன்ற செயற்பாட்டினூடாக இரத்து செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் நியமனத்தை இரத்துச் செய்து அடுத்து கூடுதல் வாக்கு பெற்ற சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக ஏற்க வேண்டுமெனவும் தேசிய மக்கள் சக்தி முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் இது தொடர்பான கருத்தொன்றை தனது டுவிட்டர் பகுதியில் குறிப்பிட்டுள்ளார். இரட்டை பிரஜாவுரிமையிருக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் அவர் அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் மங்கள சமரவீர கூறியுள்ளார்.(பா)

Mon, 05/11/2020 - 11:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை