ரூ. 5,000 கொடுப்பனவை மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்

ரூ. 5,000 கொடுப்பனவை மே மாதத்திற்கும் வழங்க தீர்மானம்-Govt Decided to Give Rs5000 Allowance for May

ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட இரு கொடுப்பனவும் நாளை முதல் வழங்க முடிவு

கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய வழங்கப்பட்டு வரும் ரூ. 5,000 கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியக் கொடுப்பனைவு நாளை (04) முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் மே மாதத்திற்கான குறித்த கொடுப்பனவை நாளை முதல் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்பு கொடுத்து நிறைவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயோதிபர்கள், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகளுக்கு மார்ச் முதல் தலா ரூபா 5,000 கொடுப்பனவை வழங்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

இக்குழுவினர் அடங்கிய மூல ஆவணங்களில் பெயர் காணப்படுகின்றவர்களுக்கும், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sun, 05/03/2020 - 23:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை